முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநர் உரை என்றும் அக்கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்ப நிதியை பகிர்ந்தளிக்கும் புள்ளி விவரங்களை கொண்டதே வரவு - செலவு திட்டம் என்றும் கூறியவர் பேரறிஞர் அண்ணா, அவரின் பொன்மொழிக்கேற்ப இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.

16-வது தமிழக சட்டமன்ற பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனது கொள்கைகளை, தனது திட்டங்களை தேர்தல் அறிக்கை வாயிலாகவும், பிரச்சாரங்கள் வாயிலாகவும் தி.மு.க. அறிவித்தது. அவற்றையெல்லாம் உள்ளடக்கி இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என நான் துருவித் துருவி பார்த்தேன். எனக்கு எதுவும் தென்படவில்லை.

அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்து எந்த தகவலும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், ஆளுநர் உரையாற்றுவதற்கு முன்பே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது என்று நிதியமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார்கள். உண்மை நிலை என்னவென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் மேலும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் மேலும் உயர்ந்தது என்பது தான் நிதர்சனம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து