முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 3-வது அலை அச்சம்...? தெலுங்கானாவில் 1480 குழந்தைகள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கம்மம் : மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 0 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது, 

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல் படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம் 800 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் திங்கள்கிழமை வரை 1,480 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்த வீட்டுக்கு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வநதுள்ளது. கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் பதிவான மொத்த 16,302 பாதிப்புகளில் 1,480 குழந்தைகள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை மட்டுமே காட்டு வதால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். 

இதற்கிடையில், மிதமான அறிகுறிகளைக் கொண்ட அந்த குழந்தைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைமைமருத்துவமனை கொரோனா வார்டுக்கு மாற்றியுள்ளனர். 

இதுகுறித்து கருத்து தெர்வித்த மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் பி மாலதி, மாவட்டத்தில் குழந்தைகள் மீட்பு விகிதம் தற்போது வரை 100 சதவீதமாக உள்ளது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து