முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தோற்றத்தில் டோனி..!

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் தன் மகளுடன் டோனி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் கேப்டன் டோனி தற்போது புது ஸ்டைலில் வலம் வருகிறார். முறுக்கு மீசையுடன் புது தோற்றத்தில் வலம் வரும் டோனியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

_________

பெரு அணி முதல் வெற்றி

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த போட்டி தொடரில் கோய்னியாவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான பெரு-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. முடிவில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பெரு அணி தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் சரண் அடைந்து இருந்தது. கொலம்பியா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 2011-ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டிக்கு பிறகு பெரு அணி கொலம்பியாவை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

____________

முதல் தடகள 3-ம் பாலினத்தவர்

நியூசிலாந்து நாட்டின் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்க உள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள முதல் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தடகள வீராங்கனையாகி உள்ளார் லாரல். 87+ கிலோ கிராம் சூப்பர் - ஹெவிவெயிட் பிரிவில் லாரல் பங்கேற்க உள்ளார். 

43 வயதான அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மூத்த வயதான தடகள வீரங்கனையாவார். கடந்த 2012க்கு பிறகு அவர் திருநங்கையாக மாறியுள்ளார். அதற்கு முன்னதாக அவர் ஆண்கள் பிரிவில் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்றார். இது ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இது நியூசிலாந்து அணிக்கும் பெருமையாகும் என நியூசிலாந்து ஒலிம்பிக் அணி தெரிவித்துள்ளது. 

______

நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரியா 

நெதர்லாந்துக்கு அன்று கடினமான சவால் அளித்த உக்ரைன் அணி ஆஸ்திரியா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது, இதன் மூலம் ஆஸ்திரியா அணி 2 வெற்றிகள் 6 புள்ளிகளுடன் 16 அணிகள் கொண்ட லாஸ்ட்-16 நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

உக்ரைன் அணி இதனால் 3ம் இடம் பெற்றுள்ளது, 3ம் இடம்பெற்ற 4 சிறந்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் அந்தப் பட்டியலில் இடம்பெறுவோமா என்று உக்ரைன் தற்போது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 3 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

______

வைரலான வீரரின் ரியாக்ஷன் !

இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஒருவர் அடித்த சிக்ஸ் அவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்க, அவருக்கு லேசான வருத்தம் ஏற்பட, ஆனால் மற்ற வீரர்களுக்கு, மேட்சைப் பார்த்த ரசிகர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது.

ஆசிப் அலி என்ற அந்த வீரர் அடித்த சிக்ஸ் தான் அது. தன் கார் கண்ணாடியை தன் சிக்சரே பதம் பார்க்க அவருக்கு கார் கண்ணாடி போன சோகம், அதனால் அவரது ரியாக்‌ஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. எதிரணியினர் சிரித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து