எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது 76.
பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா நேற்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கும் முன்பு 2018-ம் ஆண்டு டி.வி. நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்த போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது.
சுரேகா சிக்ரி, கடந்த 1978-ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்ற் படத்தில் அறிமுகமானார். அத்துடன், ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிளும், தொலைக்காட்சித் தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
1988-ம் ஆண்டு வெளியான தமஸ், மற்றும் 1995-ம் ஆண்டு வெளியான மம்மூ என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் பாலிகா வாது என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றார்.
இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989-ல் சங்கீத நாடக அகாடமி விருது வென்றார். மேலும், 64 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு சுரேகா சிக்ரி பரிந்துரைக்கப்பட்டார். சுரேகா சிக்ரி மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


