எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குவெட்டா: பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், பயிர்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் காணாமல் போனார்கள்.
இதேபோன்று கெச் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 11 பயணிகளை சுமந்து கொண்டு சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு பணிகள் நடந்தன. இதில், வயது முதிர்ந்த பெண் உள்பட 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 2 குழந்தைகளை காணவில்லை.
இந்த சூழலில் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளத்துக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி கூறியுள்ளார். வெள்ளத்தினால் 18 பேர் காயமடைந்து உள்ளனர். 18 வீடுகள் மற்றும் பயிர்களும் சேதமடைந்து உள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பகுதியளவில் சேதமடைந்து உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


