Idhayam Matrimony

இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்க மாடர்னா நிறுவனம் 75 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், 

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார். ஆனால், எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து