முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் திருநங்கை அனன்யா மர்ம மரணம் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக விளங்கியவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (28). கொல்லம் மாவட்டம், பெருமண் பகுதியைச் சேர்ந்த இவர், கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்ஜே) ஆவார். மேக்கப் கலைஞர் மற்றும் டி.வி. செய்தி வாசிப்பாளரான இவர், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கி வந்தார்.

அண்மையில் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் இவர் மனு தாக்கல் செய்து அனைவரது கவனத்தையும்  ஈர்த்தார். கேரள தேர்தல் களத்தில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெயரை அவர் பெற்றார். என்றாலும் தேர்தலுக்கு முன் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் அனன்யா, கொச்சியில் அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அனன்யா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து