அதிரடி சரிவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு

Arasu-12

Source: provided

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்தது. பெரிதளவில் மாற்றங்கள் இல்லையெனினும் ஓரிரு நாட்கள் குறைந்தால், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உயரக்கூடிய நிலையில் உள்ளது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படவே இல்லை. மேலும் அதன் மீதான மோகவும் மக்களுக்கு குறைந்தபாடில்லை. இரண்டு தினங்களுக்கு முன் ரூ.36,352க்கு விற்கப்பட்டு வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் ரூ.36,240 ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தரும் விதமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் நேற்று அதிரடியாக விலை குறைந்ததால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,490க்கும் சவரன் ரூ.35,920க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஆவணி, புரட்டாசி மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இதனால் தங்கம் விலை வீழ்ச்சியை பயன்படுத்தி இப்போதே பெற்றோர்கள் திருமணத்துக்கு நகைகளை வாங்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து