இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட ஐந்து பேர் அறிமுகம்

Introduced 2021 07 23 0

Source: provided

கொழும்பு: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா, கே. கவுதம், ராகுல் சாஹர் உள்ளிட்ட ஐந்து புதுமுகங்கள் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.

ஒயிட்வாஷ்... 

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இருந்தது.

5 வீரர்கள் அறிமுகம்...

3-வது மற்றும் கடைசி போட்டியில்டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா, கே. கவுதம், ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து