எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிளாஸ் - 1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர்.செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியமான பொருளான சிமெண்ட் விலை சமீபகாலமாக உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் சிமெண்ட் விலையேற்றம், இத்தொழிலைக் கடுமையாக பாதித்துள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டு சேர்ந்து செயற்கையாகத் தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்தி வருகின்றனர். இதில், சிமென்ட் உற்பத்தியாளர்களின் கூட்டுச் சதி உள்ளது. இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
ஆகவே, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் சீனிவாசனிடம் நோட்டீஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, சிமென்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி, ஜூன் 3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


