சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்

Ben-Strokes 2021 07 31

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருக்கவுள்ளதாக திடீரென அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு... 

மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக காலவரையற்ற விடுப்பை ஸ்டோக்ஸ் எடுத்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அணிக்காக மீண்டும் விளையாடுவதை எதிர்நோக்குவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ் தெரிவித்தார். பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டராக... 

1991-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், இளம் வயதில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார். உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் விளையாடத் தொடங்கி படிப்படியாக இங்கிலாந்து அணியில் இடம்பெற்று நட்சத்திர ஆல்ரவுண்டராக மாறினார். இங்கிலாந்து அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். ஸ்டோக்ஸின் திடீர் விலகல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து