Idhayam Matrimony

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற சூழலில் இருக்கும் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 

கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயது வரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பி.எம். கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித் தொகையும், 23 வயது அடையும் போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

பி.எம். கேர்ஸில் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், கொரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் திட்டமாகும். இந்த திட்டம் 2020, மார்ச் 11-ம் தேதி முன்தேதியிட்டு தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நலன், மனநலம், கல்விச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்கவும், 23 வயது அடையும் போது வாழ்க்கையை நடத்த உதவித்தொகையும் வழங்குவதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து