Idhayam Matrimony

நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 62-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.  அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

உங்களது ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து