Idhayam Matrimony

ஆபாச பட வழக்கு: ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய மும்பை ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.

மாடல் அழகிகளை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மொபைல் ஆப் மூலமாக வெளியிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் அவர் முன்னதாக 2020-ம் ஆண்டு ஆபாச படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழக்குமாறு ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர், சைபர் போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தனக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கே.ஷிண்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிஜக்தா ஷிண்டே, 

இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் பங்கு மற்ற குற்றவாளிகளில் இருந்து வேறுபட்டது. இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதி, ராஜ் குந்த்ராவின் முன்ஜாமீன் மனு குறித்து வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து