தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர அனுமதி தெலுங்கானா அரசு அறிவிப்பு

covid vaccine 2020 07-18

Source: provided

திருமலை: தெலுங்கானாவில் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தெலங்கானாவில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்த நிலையில், 3வது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக தற்போதைக்கு உள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல் பொது இடங்களில் வருவதற்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நிபந்தனையை விதிக்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் 100 சதவீதம் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு சிலர் தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியமாக இருப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திரையரங்கு, ஷாப்பிங் மால், பேருந்துகள், கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் வரக்கூடியவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என அறிவிக்கவேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விதமாக நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து