எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தாஜ் மஹால் மூடப்பட்டது. கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் இரவு நேர பார்வைக்காக தாஜ் மஹால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வெள்ளிக் கிழமைகளில் தாஜ் மஹால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


