Idhayam Matrimony

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 2024 லோக்சபா தேர்தல், விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து