எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் குணமடைந்த போதிலும், அவருக்கு அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு வந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து, தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் ஒரு ரத்தக்குழாயில் 90 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அடைப்பை நீக்க அசோக் கெலாட்டுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக ஸ்டென்ட்பொருத்தப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக மருத்துவ கல்லூரி முதல்வர் சுதிர் பண்டாரி கூறினார். இரண்டு, மூன்று நாட்கள் முழுஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தினார். தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவதாகவும் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அசோக் கெலாட் பூரண குணமடைந்த நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். இதன்படி அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


