Idhayam Matrimony

திருநங்கைகளுக்கு தனி கழிவறை: டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்படும் என டெல்லி மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளுக்கான தனிக்கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து டெல்லி மெட்ரோ அலுலவர் கூறுகையில்,

பாதுகாப்பான இடம் அளித்து திருநங்கைகளுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் முயற்சியில், மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிவறைகளை தவிர்த்து தங்களின் பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது  என்றார்.

டெல்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளுக்கான கழிவறைகளை தவிர்த்து 347 மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் உள்ளன.

இது அவர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு உதவும் வகையில் இக்கழிவறைகளில், ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்படவுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகள்போல் திருநங்கைகளின் சின்னம் பொறிக்கப்பட்ட பலகைகள் வைக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து