முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் நேற்று முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது. கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் 11-ம் தேதி கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (செப்டம்பர் 11) நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. 

 

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 1,200 முதுகலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து