முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம்: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வெழுதிய மானவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

நீட் தேர்வெழுதிய அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட மாணவர்களை அழைத்து, அவர்களின் ஒப்புதல் பெற்று தொலைபேசியில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் 104 இலவச மருத்துவ சேவை மையத்தில் 24 மணி நேரமும் 40 மனநல ஆலோசகர்களை கொண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே நிலவும் மன அழுத்தம், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இது அமையும். தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. இந்த ஒரு தேர்வு எதையும் பெரிதளவில் சாதித்து விடாது. மானவர்கள் ஒரு தேர்வு இல்லையென்றால் அடுத்தத் தேர்வுக்கு முயற்சிக்கலாம். இது போன்ற பல்வேறு ஆலோசனைகள் மானவர்களுக்கு 12 வகைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகம் முழுதும் 333 மன நல ஆலோசகர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் எப்படி பேச வேண்டும், அவர்களுக்கு மன அழுத்தம் இருந்தால் எப்படி பேச வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகள், மன நல ஆலோசகர்களுக்கும் மனநல மருத்துவர்களுக்கும் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வெழுதிய மாணவர்களிடம் முதலில் பேசப்படும். 38 மாவட்டங்களிலும் இது தொடங்கப்படுகிறது. 

நானும் 2-3 மாணவர்களிடம் பேசினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றனர். ஒருவர் மிகுந்த கஷ்டமாக தேர்வு இருந்தது என்றார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதாக மாணவர்களிடம் கூறினோம். தேர்வு குறித்த அச்சத்தை நீக்குவதற்கு இந்த மனநல ஆலோசனை தீர்வாக இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை: தமிழகம் முழுவதும் செப்.,17ல் நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்.,19க்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக, 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட கூடுதலாக மொத்தம் 28.36 லட்சம் பேருக்கு அன்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து வரும் 17-ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழகத்தில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால், தமிழகம் முழுவதும் 17-ம் தேதி நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து