113-வது பிறந்த நாள்: சென்னையில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

CM-1 2021 09 15

Source: provided

சென்னை  : பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை, அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை, அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து