முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
CM-2 2025-10-19

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்பொழுது வடகிழக்கு பருவமழை நிவாரணம், மீட்பு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கேட்டறிந்தார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை, தாம்பரம், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளன. 

கோவை, திருப்பூர், நீலகிரி சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாடு அரசு சார்பில் மழை நிவாரண பணிகள், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநகர, நகர, பேரூராட்சி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

பருவ மழையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கை, கட்சி சார்பிலான நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அறிவுறுத்தல் இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரும் தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கினர். கனமழை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து மக்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

முன்னதாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்பொழுது வடகிழக்கு பருவமழை நிவாரணம், மீட்பு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கேட்டறிந்தார். ஆலோசனையில் நகராட்சி நிர்வாக துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து