Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முன்னிட்டு- சீன வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும் கலந்து கொண்டது.  ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு அமைப்பு ஒன்றை நிறுவின.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் 2005-ம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்து வந்தது. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடுகளாகி விட்டன.

இந்த அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நேற்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்தது. மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துதினார். நேரடியாகவும், காணொலி முறையிலும் நடந்த இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக நேரில் கலந்து கொண்டார். இதற்காக அவர் ஏற்கனவே துஷான்பே சென்றார். மாநாட்டுக்கு இடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து