முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் இன்று கொரோனா தடுப்பூசி: 1,600 சிறப்பு முகாம்கள்

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  மேலும், 12.9.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு. 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் போது பொது மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயன் அடைகின்றனர். எனவே, இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்று  (19-ம் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1,600 தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன் அடையலாம்.  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 2538 4520, 044 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.  பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து