எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தே.மு.தி.க. சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தே.மு.தி.க. சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


