முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் கோப்பையை வெல்ல மும்பை - டெல்லிக்கு வாய்ப்பு முன்னாள் வீரர் ஷேவாக் கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம் என ஷேவாக் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் 4 மாதங்களுக்கு பிறகு துபாயில் நேற்று தொடங்கியது. 14-வது ஐ.பி.எல். போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பது தொடர்பாக முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மும்பை அணி...

ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்றப்பட்டதால், டெல்லி, மும்பை அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். இதில் மும்பை இந்தியன்ஸ்சுக்குதான் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.

சென்னை - பெங்களூரு...

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும். இதனால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம். ஐ.பி.எல். முதல்கட்டத்தில் அதாவது இந்திய மைதானங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரி ஸ்கோர் 201 ஆகும். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அவர்களது பேட்டிங் திறன் பாதிக்கப்படலாம். அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் பற்றாக்குறையாகவே இருக்கிறது.

ஐ.சி.சி. அனுமதி... 

ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியை தேர்வு செய்ய சொன்னால் என்னை பொறுத்தவரை அது மும்பை இந்தியன்சாக இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் இனி 7 ஆட்டங்கள் உள்ளன. இனி வரும் ஆட்டங்களில் திறமையை நிரூபிக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அக்டோபர் 10-ம் தேதி வரை அணிகளை மாற்றம் செய்ய ஐ.சி.சி. அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து