எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 448 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,136-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற- இறக்கம் கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக செப்டம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை பின்பு குறைந்து வந்தது. இதனால் கடந்த 24-ம் தேதி அன்று ரூ.35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து பவுனுக்கு ரூ.34,896-க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது.
ஆபரணத்தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,336 ஆகவும், பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.34,688-க்கு விற்பனையானது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.4,392-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.35,136-க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளியின் விலையில் கிராமுக்கு 70 காசு உயர்ந்து கிராம் ரூ.63.70-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.63,700-க்கு விற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


