முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஆர்ட்டிக்கல் 15 - தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து  மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார்.

பின்னர், 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார். மேலும் உதயநிதி ஸ்டாலின்  மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கி சர்ப்பிரைஸ் கொடுத்தார்.

மயில்சாமி கேக் வெட்டி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ROMEO PICTURES வெளியிடும் இப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து