முக்கிய செய்திகள்

நடுக்கடலில் கப்பலில் போதை விருந்து: நடிகர் ஷாருக்கான் மகனிடம் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Aryan-Khan 2021 10 03

Source: provided

மும்பை : மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலீஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து போலீஸார் பயணிகள் போல படகில் ஏறினர். படகு மும்பையில் இருந்து கிளம்பி கடலுக்குள் பயணித்த போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். ஆரியன் யார் யாருடன் பேசினார், என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து