முக்கிய செய்திகள்

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை : அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Senthil-Balaji 2021 07 27

Source: provided

சென்னை : தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரிகள் இருப்பு உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான போதிய நிலக்கரி இருப்பில் இல்லை என்பதால் மின் விநியோகத்தில் குறைபாடு ஏற்பட்டு மின் வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான அளவு நிலக்கரி இருப்பதாக நிலக்கரித்துறை தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு எதுவும் ஏற்படாது எனவும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு, மின் உற்பத்தி பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேட்டில் இருந்து மின்சாரத்துறையை மீட்டெடுக்க முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை. 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரிகள் இருப்பு உள்ளது. 3,500 மெகாவாட் அளவிற்கு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாது வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து