முக்கிய செய்திகள்

ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார் நவ்ஜோத்சிங் சித்து

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      இந்தியா
Sidhu 2021 10 16

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தமது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார்.

ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசியதாகவும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாகவும் நவ்ஜோத் சிங் சித்து விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்ற சரஞ்சித் சிங் சன்னியுடன் கருத்து வேறுபாடு நீடித்ததால் சித்து கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.

இதனை அடுத்து காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது, இந்நிலையில் ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து