எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர ஒயாது உழைப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். சபதம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆ.ரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழா கொண்டாடுகிறது.
அ.தி.மு.க. 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும், இந்தப் பொன் விழா ஆண்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது என்பதையும் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்கிறேன்.
கட்சி பணியாற்றிய நேரத்தில் உயிர் நீத்த உத்தமத் தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். கட்சியை உயிரினும் மேலாய் மதித்து வாழும் தொண்டர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடுதான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன. ஆனால், கணக்கு கேட்டதற்காக, ஊழலைத் தட்டிக் கேட்டதற்காகப் பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. அதனால் தான், தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தைப் படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவரின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்ற தி.மு.க.வின் சதித் திட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால் இருந்தது.
அவரின் மறைவிற்குப் பிறகு, சில துரோகிகளின் துணையோடு கட்சியை அழிக்க நினைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதன் விளைவு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. “சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும்' என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக மக்கள் விரோத ஆட்சி மீண்டும் உருவானது. கட்சி பிளவுபட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், சேவல்' சின்னத்தில் தனியாகக் களம் கண்டு, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளவுபட்ட கட்சி மீண்டும் ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அம்மா ஆட்சிக் காலத்தில், தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக் காவல் நிலையங்களை உருவாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திக் காட்டியது, உலகத் தரம் வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.
1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்து, இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி நல்கிய அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது கடினம்என்று உணர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி2006-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். இருப்பினும், தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது.
2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப் போய்விட்டது.
போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், விடியலை நோக்கி எனப் பிரச்சாரம் செய்துவிட்டு இன்று விடியா அரசாக காட்சி அளிக்கிறது. சட்டப்பேரவை அடுத்த வாரிசின் புகழ்பாடும் மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அ.தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு தொடங்கும் இப்பொன்னாளில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஒயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.
இவ்வாறு ஓ.பி.எஸ்.தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மைதானங்கள் தேர்வு; அகமதாபாத்தில் இறுதிப்போட்டி
06 Nov 2025மும்பை: 2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.


