எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டம்மீஸ் ட்ராமா என்னும் குழுவினரால் மேடை நாடகமாக நடத்தப்பட்டுவந்த இந்த விநோதய சித்தம் தற்போது சினிமாவாகியிருக்கிறது. படத்தின் கதை இதுதான். கதாநாயகனான தம்பி ராமைய்யா மிகவும் கண்டிப்பான ஒரு மனிதர். எல்லாம் ஒழுங்குடன் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
தனது 25வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், திடீரென ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில் மரணமடையும் அவரை அழைத்துச் செல்ல காலன் வருகிறான். தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் சற்று அவகாசம் தரும்படி கேட்கிறார்.
90 நாட்கள் அவகாசம் தருகிறான் காலன். அந்த 90 நாட்களில் ராமைய்யாவுக்கு ஏற்படும் புரிதல்கள்தான் மீதிப் படம். திரைக்கதையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தில் வரும் ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சியாக அமையவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான அம்சம், அந்த காட்சியை ரசிக்கவைக்கிறது.
இந்தப் படத்தில் காலனாக நடித்திருப்பது படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி. ஒவ்வொரு காட்சியிலும் காலனாக வரும் சமுத்திரக்கனி என்ன சொல்லப்போகிறார் என கவனிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி, முனீஷ் காந்த், ஜெயப்பிரகாஷ், சஞ்சிதா ஷெட்டி என எல்லாருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். திரை ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள் சிலர் வந்தாலும், அவர்களும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார்கள்.
தம் இருப்பு குறித்தும் தாம் செய்யும் காரியங்கள் குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் தேவையில்லாத நம்பிக்கைகள், பெருமிதங்கள் ஆகியவற்றை உடைக்கும் தத்துவ உரையாடல்தான் இந்தப் படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


