எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆர்.இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131% அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் நேற்று சோதனை நடைபெற்றது. ஆர்.இளங்கோவன் மகன் பிரவீன் குமார், திருச்சியில் உள்ள கல்வி அறக்கட்டளை ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார். அங்கும் சோதனை நடைபெற்றது. அதேபோல் கரூரில் உள்ள இளங்கோவனின் சகோதரி வீட்டிலும் ரெய்டு நடந்தது.
முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து இளங்கோவன் ரெய்டில் சிக்கியுள்ளார். ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன் சோதனை வளையத்துக்குள் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது சேலம் வீடு, திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரூரில் உள்ள உறவினர்களின் வீடுகள், சென்னை மற்றும் நாமக்கல் என மொத்தம் 27 இடங்களில் நேற்று ரெய்டு நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


