முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 12 சுற்று போட்டிகள்: இன்று முதல் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகளும், இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

தகுதிச் சுற்றுகள்...

7-வது ஐ.சி.சி டி-20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. இதில் பி பிரிவு போட்டிகள் முடிந்தன. இந்த பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றன. ஏ பிரிவில் நேற்றுடன் தகுதி சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் முதல் முறையாக நமீபியா சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள 8 அணிகள் நேரடியாக இந்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. மீதமுள்ள 4 அணிகள் தகுதிச்சுற்றில் இருந்து தேர்வாகிறது.

இரு பிரிவுகளாக...

12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இருபிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் தென்ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் இன்று தகுதி சுற்றின் முடிவை பொறுத்து ஏ பிரிவில் இருந்து ஒரு அணி இடம்பெறும். குரூப் 2 பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2ம் இடம்பிடிக்கும் அணி இடம்பெறும்.

முதல் போட்டி...

 

சூப்பர் 12 சுற்றில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு துபாயில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. இன்று முதல் பிரதான சுற்று தொடங்க உள்ளதால் டி.20 உலக கோப்பை தொடரில் அனல்பறக்கும் என்றும் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து