முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை: சீனாவில் வருகிறது புதிய சட்டம்

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : வீட்டுப்பாடம் மற்றும் டியூசன் என்கிற மாணவர்களின் இரட்டை அழுத்தங்களை குறைக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றவுள்ளது சீன அரசு.

சீனாவில் சமீபகாலமாக, மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையிலும், மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாட வேண்டும் என்று சமீபத்தில் சீன கல்வித்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து, குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்றச் செயல்களுக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபட வேண்டும் என்று இந்த சட்டம் பரிந்துரைக்கிறது.

மேலும் இந்த புதிய சட்டம், மாணவர்களின் வீட்டுப் பாடங்களை குறைத்து, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் முக்கிய பாடங்களுக்கு பள்ளிக்குப் பிறகு டியூசன் கற்பிப்பதை தடை செய்யும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து