முக்கிய செய்திகள்

டெல்லியில் வரும் 26-ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா-ராகுல் காந்தி ஆலோசனை

Sonia-Rahul 2021 10 23

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் வரும் 26-ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா மற்றும் ராகுல் காந்தி  ஆலோசனை நடத்தவுள்ளனர். கட்சியில் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது போராட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள், சட்டமன்ற தேர்தல்கள் பற்றி கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். வருகிற 26-ம் தேதி (செவ்வாய்) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்கள், செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்துக்கு ராகுல் முன்னிலை வகிக்கிறார். கட்சியில் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது போராட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள், சட்டமன்ற தேர்தல்கள் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டங்களை நாடுமுழுவதும் நடத்துவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் எடுத்து சென்று அரசுக்கு எதிராக மக்களை திருப்பிவிட மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் பற்றி விவாதிக்க உள்ளனர். அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி முதல் ஒரு வருடத்துக்கான செயல்திட்டங்கள் பற்றி முடிவு செய்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து