முக்கிய செய்திகள்

ஜப்பான் இளவரசியாக கடைசி பிறந்தநாளை கொண்டாடிய 'மகோ'

Macho 2021 10 23

Source: provided

டோக்கியோ : காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி மகோ, இளவரசியாக தன்னுடைய கடைசி பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று மகோ தன்னுடைய 30 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த மகோ, இளவரசியாக கொண்டாடிய கடைசி பிறந்தநாள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து