முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய சென்னையிலிருந்து புறப்பட்டார் சசிகலா : 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தென் மாவட்டங்களுக்கு ஒரு வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் நேற்று காலை சென்னையில் இருந்து கிளம்பினார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே எதிர்பாராதவிதமாக அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கம். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு 1 வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் நேற்று காலை சென்னையில் இருந்து கிளம்பினார். தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவருடன் இளவரசியும் உடன் செல்கிறார்.

மக்கள் ஆதரவைத் திரட்ட சசிகலா, 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் தஞ்சாவூர் செல்லும் சசிகலா, இரவில் அங்கேயே தங்கிய பின்னர் இன்று (அக்.27) டி.டி.வி. தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் (28-ம் தேதி) மதுரை செல்லும் அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். அங்கே தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

அக்டோபர் 29-ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களைச் சந்திக்கிறார். 30-ம் தேதி மதுரை முத்துராமலிங்கதேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் சசிகலா அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா, மீண்டும் ஆதரவாளர்களைச் சந்திக்கிறார். மேலும் திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயணத்துக்கான முன்னேற்பாடுகளை அ.ம.மு.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து ஓ.பி.எஸ். மற்றும் கட்சியினரிடையே உள்ள மாறுபட்ட கருத்துகள் ஊடகங்களில் வெளியான சூழலில் சசிகலாவின் ஒரு வார கால சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து