முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கொள்கைகள் சென்றடைய வேண்டும்: சோனியா காந்தி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

5 மாநில தேர்தலில் அனைத்து பிரிவினரிடமும் நமது கொள்கைகள், திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரச்சாரங்கள் அமைய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் காரிய கூட்டம் கடந்த 16-ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது புதிய தேசிய தலைமையை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்து இறுதியாக அகில இந்திய தலைவரை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, விலை வாசி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இது சம்பந்தமாக விவாதிப்பதற்காகவும், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டினார். இந்த கூட்டம் நேற்று காலை தொடங்கியது. சோனியா காந்தி தலைமை தாங்கினார். ராகுல்காந்தி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். 5 மாநில தேர்தலை எப்படி சந்திப்பது என்று விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் இருந்து தீவிரமாக நாம் வளர்க்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகமும், அரசியல் சாசன சட்டங்களும் நாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டது. ஆனால் இன்றைய ஆட்சியில் அவை வீழ்த்தப்பட்டு வருகின்றன. இதை முறியடிக்க வேண்டும். இது சம்பந்தமாக மக்களிடம் நாம் பிரசாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும். நமக்கு எதிராக நடக்கும் தவறான பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். கட்சியில் உள்ள அனைவரும் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை மறந்து கட்சிக்காக பாடுபட வேண்டும்.

கட்சியில் கட்டுப்பாடு, ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. இவை இருந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும். எனவே அதன்படி அனைவரும் செயல்பட முன்வர வேண்டும். காங்கிரசின் கொள்கைகளை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். தேசம் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அடிமட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். 5 மாநில தேர்தலில் அனைத்து பிரிவினரிடமும் நமது கொள்கைகள், திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரசாரங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி முதல் மாவட்ட அளவில் தலைவர், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்டு 20-ம் தேதி வரை மாநில தலைவர், துணை தலைவர், செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நடக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அகில இந்திய தலைவர், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். முன்னதாக வருகிற நவம்பர் 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் விலைவாசி உயர்வை எதிர்த்து யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து