முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி: பந்துவீச்சு சொதப்பிய இந்திய அணி வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : உலகக்கோப்பை போட்டி என்றாலே எப்போதும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும். ஆனால் இந்த முறையோ பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தியது.

பரம எதிரிகள்...

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றன. இவ்விரு அணிகளும் மோதும் போட்டியானது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும். இரண்டு அணிகளும் நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது கிடையாது. எனவே ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடி வருகிறது. 

இந்தியா தோல்வி...

உலகக்கோப்பை போட்டி என்றாலே எப்போதும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும். ஆனால் இந்த முறையோ பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்திய அணி  வீரர்கள் மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அணி தோற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் இந்திய வீரர்கள் பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

மோசமான தொடக்கம்...

தோல்விக்கு காரணம் என ஆராய்ந்தால் பல காரணங்கள் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா டாஸ்சில் தோற்றதும் காரணமாக அமைந்தது. ஏனெனில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மைதானத்தில் பனியின் தாக்கம் இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். இதையே பாகிஸ்தானும் செய்தது. மோசமான தொடக்கம் தான் காரணமா என்றால் அதுவும் ஒரு காரணம் தான்,

மிடில் ஆர்டர்...

ஒரு அணி வெற்றிபெற, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியம். அதனை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கத் தவறினர். மிடில் ஆர்டர் வீரர்கள் பந்துகளை வீணடித்தனர் என்றால் அதுவும் ஒரு காரணம் தான் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் உள்பட   சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா போன்ற  முன்னணி வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தவில்லை.

சொதப்பிய...

பின்வரிசை வீரர்கள் அதிரடி காட்டவில்லை என்றால் அதுவும் ஒரு காரணம் தான் பாகிஸ்தானுக்கு குறைந்தது 180 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியால் 151 ரன்களே எடுக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க தவறினாலும் பந்துவீச்சாளர்களாவது  தங்களது பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள்  ஒரு விக்கெட் கூட எடுக்காதது அணியின் வெற்றிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

சாதகமாக இல்லை...

மொத்தத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை கத்துக்குட்டி அணி போல கருதி விளையாடியது. போட்டியின் முடிவும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இரு அணிகளும் அழுத்தம் நிறைந்த சூழலில் விளையாடிய போது, இந்திய அணி அதனை சரியாக கையாளாததால் ஆட்டத்தில் முடிவு  நமக்கு சாதகமான அமையவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து