முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      இந்தியா
Delhi 2024 08 03

புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 77வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று சின்னங்கள், விமான நிலையங்கள், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர்கின்றன. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. 

அதேபோல், மும்பையில் பல்வேறு அரசு கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடமைப் பாதை அருகேயுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வந்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை, மத்திய இணையமைச்சர் ஜித்தின் பிரசதா வரவேற்றார். அதேபோல், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலைய கார் பார்க்கிங் பகுதி, பயணிகள் வெளியேறும் நுழைவு வாயில் உள்ளே செல்லும் நுழைவு வாயில் என அனைத்து இடங்களிலும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்திலும் காவல்துறையினர், ரயில்வே காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தென்காசி, திண்டுக்கல், விருத்தாசலம் ரயில் நிலையங்களிலும் ரயில்வே காவலர்களுடன் காவல்துறையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து