முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் 1.50 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தஞ்சாவூரில் தி.மு.க. டெல்டா  மண்டல மகளிர் அணி மாநாட்டை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டு மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர 100 ஏக்கரில் இருக்கைகள் அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. மீதமுள்ள 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு பூத்துக்கு 10 போ் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளில் இருந்து மொத்தம் 1.25 லட்சம் போ் சீருடையில் கலந்து கொள்ள உள்ளனா். மொத்தத்தில் ஏறத்தாழ 1.50 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகிக்கிறார்.

இந்த மாநாட்டுக்காக பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது. மேலும் மாநாட்டு திடலில் வாழை மரங்கள், கரும்புகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற உள்ளன. இதற்காக வாழை மரங்கள், கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

முதல்வர்  வருகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்து உள்ளாா். மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து