எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து பல அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலையானது. இந்நிலையில், புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, நேற்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும், முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலை நாள் கொண்டாட்டத்தில் நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி கூறியாதாவது.,
புதுச்சேரியில் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில், போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களின் வளர்ச்சியில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், வேளாண் தொழிலில் காணப்படும் வேலையாட்கள் பற்றாக்குறையை இயந்திரமயமாக்கல் மூலம் ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, அரசு துறைகளில் காலியாக உள்ள 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் கனமழையினால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


