முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை மாதம் பிறந்தது: மாலை அணிந்து விரதத்தைத் துவங்க சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதத்தை துவக்க வந்த பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க தடை காரணமாக ஆற்றங் கரையோரமாக புனித நீராடினர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம்.  அந்த வகையில், கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதத்தைத் துவக்க சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். மாலை அணிந்து விரதம் தொடங்கும் நிகழ்ச்சி கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று துவங்கியது. 48 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடைபெறும்.

ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளன்று தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், அனுமந்தன்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து புனித நீராடி சுருளி மலை பகுதியில் உள்ள ஐயப்ப சாமி கோவில், பூத நாராயணர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குருசாமிகள் மூலமாக மாலை அணிந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுருளி அருவி பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.  கொரோனா குறைந்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான நேற்று சுருளி அருவி பகுதியில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

மாலை அணிந்து விரதத்தை துவக்க வந்த பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க தடை காரணமாக ஆற்றங் கரையோரமாக புனித நீராடி கற்பக விநாயகர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், ஐயப்ப சுவாமி கோவில், பூத நாராயணன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சரண கோஷங்கள் முழங்க மாலை அணிவித்து தங்களது விரதத்தை துவக்கினர்.

முன்னதாக குருசாமி தலைமையில் பக்தர்கள் புனித நீராடி ஆறாட்டு முடிந்தபின் விரதம் இருந்த பக்தர்கள் கருப்பு, காவி உடை அணிந்து, துளசி மாலை, சந்தன மாலைகளை சரண கோஷம் முழங்க உற்சவர் முன்பு குருசாமி கையால் மாலையை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து