முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

தி.மலை : திருவண்ணாமலை மலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணியளவில் அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வர். பின்னர் மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது, சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதேநேரத்தில் மலைஉச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, தீபத் திருவிழாவிற்கு வெளியூர் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை 3 நாள்களும் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வருவதை கண்காணிக்கும் விதமாக நகரின் எல்லை பகுதியில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து