முக்கிய செய்திகள்

பொன்மாணிக்கவேல் விமர்சனம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Ponmanikkavel-Review 2021 1

Source: provided

சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக்கி வெற்றி பெற்ற ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைதான் இந்த பொன் மாணிக்கவேல் படத்தின் கதை. நீதிபதி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் பிரபுதேவா. 

அவர் இந்த வழக்கை அலட்சியமாக கையாள உடனிருக்கும் மற்ற காவலர்கள் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்கள். தொடர்ந்து கொலைகளும் நடக்கின்றன. பிறகு என்ன நடந்தது? யார் கொலையாளி? கொலைக்கான நோக்கம் என்ன என்பதே படத்தின் கிளைமாக்ஸ். குறிப்பாக படத்தில் ஒரு காட்சியில், சும்மா எதுக்கு சார் துப்பாக்கி இருக்கு என்று கூறி விட்டு துப்பாக்கியை பிடுங்கி தன்னை சுட்டுக் கொண்டு  ஒரு பெண் தற்கொலை செய்யும் காட்சியில் பிரபுதேவா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இந்தப் படத்தில் பாராட்டத்தக்க விஷயம் ஒளிப்பதிவு. இமானின் இசையில் 'உதிரா உதிரா' பாடல் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் நேர்மையான இந்த பொன்மாணிக்க வேல் ஐபிஎஸ் அதிகாரியை ஒரு முறை சந்திக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து