முக்கிய செய்திகள்

வடகரோலினாவில் இருந்து வெள்ளை மாளிகை வந்தது கிறிஸ்துமஸ் மரம்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      உலகம்
White-House 2021 11 23

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக் கொண்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மரம் குதிரை வண்டியில் கொண்டு வரப்படும்.  அதே போல், 2021-ம் ஆண்டு கிறுஸ்துமஸ் பண்டிகைக்காக வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 18.5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஜில் பைடன் கூறுகையில், அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் விடுமுறையை கொண்டாடுங்கள் என்றார். இந்த நிகழ்வின்போது, அமெரிக்க அதிபரின் மகன் ஹண்டர் பைடன், மருமகள் மெலிஸா மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து