Idhayam Matrimony

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஸ்வீடனில் இன்று வாக்கெடுப்பு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஸ்வீடனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் இன்று  24-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும்.

ஸ்வீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெபான் லோப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாா். இதையடுத்து, பிரதமா் பதவியை அவா் ராஜினாமா செய்தாா். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்பட்டாா். அடுத்த பிரதமராக அவா் தோ்வு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். 

349 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 175 பேரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கு இப்போது 100 உறுப்பினா்கள் உள்ளனா். அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சோ்த்து 174 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு ஓரிடம் குறையும் நிலையில், எதிா்க்கட்சிகள் பிரிவால் மக்டெலனா ஆண்டா்சனுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்டெலனா ஆண்டா்சனை பிரதமராக தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவா் தெரிவித்தாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து